cars

[Bikes]

ஹூண்டாயின் அடுத்த சரவெடி - பாஸாகுமா டூஸான்?

சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2005-ம் ஆண்டு ஹூண்டாய் டூஸான் எஸ்யூவி காரை அறிமுகம் செய்தது. அந்தச் சமயம், இதற்குப் போட்டியாக இருந்த ஒரே கார், ஹோண்டா CR-V. ஹோண்டா என்கிற பந்தாவான பெயர்; டூஸானைவிடவும் குறைவான விலை ஆகிய இரண்டு காரணங்களால், டூஸான் அப்போது எடுபடவில்லை. 

இது விற்பனையில் இருந்த ஐந்து ஆண்டுகளில் 2,000-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனையானது. ஆனால், இப்போது காலம் வெகுவாக மாறிவிட்டது. கார் நிறுவனங்கள் அனைத்தும் எஸ்யூவி கார் உற்பத்தியில் கவனம் செலுத்தும் அளவுக்கு, இந்த செக்மென்ட் வளர்ச்சியடைந்து வருகிறது. எஸ்யூவி என்றால், பிரமாண்டமாக இருக்க வேண்டும்; லேடர் ஆன் சேஸி அமைப்பில் வடிவமைக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற எண்ணங்கள் மறைந்து, எஸ்யூவி கார்கள் பல அளவுகளில் வர ஆரம்பித்து விட்டன. இந்த மார்க்கெட்டில் க்ரெட்டா வாயிலாக அழுத்தமாக கால் பதித்திருக்கும் ஹூண்டாய், க்ரெட்டாவைவிட பெரிய, ஆனால் சான்டா ஃபீ காருக்குச் சற்றே சிறிய அளவிலும் விலையிலும் ஒரு எஸ்யூவிக்குத் தேவை இருப்பதை உணர்ந்து கொண்டு, டூஸானை அறிமுகப்படுத்தி யிருக்கிறது. 

வெளித்தோற்றம்

ஃப்ளுயிடிக் 2.0 டிஸைனில் வடிவமைக்கப்பட்டிருக்கும் மூன்றாம் தலைமுறை டூஸனில், க்ரெட்டா மற்றும் சான்டா ஃபீ கார்களின் சாயல் தெரிகிறது. க்ரெட்டாவைப் பெரிதுப்படுத்தினால் எப்படி இருக்குமோ அப்படி இல்லாமல், சற்றே சுருங்கிய சான்டா ஃபீ காரைப் போலத்தான் இருக்கிறது டூஸான். மேற்கூரை, கேபின், கிரில், வீல் ஆர்ச், ஸ்பாய்லர் என்று காரில் இருக்க வேண்டியவை எல்லாம் சரியான விகிதாசாரத்தில் இருந்தால்தான், ஒரு கார் நன்றாக இருக்கும். இந்த வகையில் டூஸான் சரியான விகிதாசாரத்தில் டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது. டே டைம் ரன்னிங் லைட்ஸ் உடன் டபுள் பேரல் LED ஹெட் லைட்ஸ், ஹெக்ஸகன் வடிவிலான கிரில் ஆகியவை, அறுகோண காரின் முகப்புக்கு அழகு சேர்க்கின்றன. ஆட்டோமேட்டிக் வேரியன்ட்டில் 18 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல் மற்றும் 225/55 டயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மேனுவல் வேரியன்டில் இருப்பதோ, 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் மற்றும் 225/60 டயர்கள். பின்பக்கத்தில் இருக்கும் ஷார்க் ஃபின் ஆன்டெனா, டபுள் ஸ்பாய்லர் மற்றும் டே டைம் ரன்னிங் லைட்ஸ் உடன் கூடிய டெயில் லைட்ஸ் இதற்கு தனித்துவமான தோற்றத்தைக் கொடுக்கின்றன. 

உள்ளலங்காரம்

காருக்கு உள்ளே சென்றால், சான்டா ஃபீ காரைவிட க்ரெட்டாதான் அதிகம் நினைவுக்கு வருகிறது. க்ரெட்டா என்று சொல்வதால், தரம் குறைவாக இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. லெதரால் அலங்கரிக்கப்பட்ட ஸ்டீயரிங் வீல், லெதர் இருக்கைகள், சுவிட்சுகள் மற்றும் கியர் லீவர் ஆகிய எல்லாமே, டிரைவரின் கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கின்றன. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் ப்ளே கொண்ட  8 இன்ச் டச் ஸ்கிரீன் அற்புதம். அதே போல, டேக்கோ மீட்டர் மற்றும் ஸ்பீடோ மீட்டர் ஆகிய இரண்டுக்கும் இடையில் இருக்கும் 4.2 இன்ச் பேனலில், டிரிப் மீட்டர் போன்ற தகவல்களைப் பார்த்துக் கொள்ள முடிகிறது. 

கேபின் ஸ்பேஸை எடுத்துக் கொண்டால், இது மூன்றாவது வரிசை இருக்கைகள் இல்லாத சான்டா ஃபீ கார் மாதிரி இருக்கிறது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு இதன் முதல் மற்றும் இரண்டாம் வரிசை களில் இடம் தாராளமாக இருக்கின்றன. இரண்டாம் வரிசை இருக்கைகளையும் பின் நோக்கிச் சாய்த்துக் கொள்ள முடிகிறது. இதில் டூயல் ஸோன் ஏ.சி. அத்துடன் பின்னிருக்கைகளுக்கும் தனி ஏ.சி வென்ட் உள்ளன. இருக்கைகள் சற்றே தாழ்வாக இருப்பதாலும் ஜன்னல் கண்ணாடிகள் சற்றே உயரமாக இருப்பதாலும் சாலையைப் முழுமையாகப் பார்ப்பதில் கொஞ்சம் அசெளகரியம் இருக்கிறது. சன்ரூஃப் மற்றும் AWD உடன் கூடிய வேரியன்ட் தேவை என்றால், அதற்கு அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டும் என்கிறது ஹூண்டாய். டிக்கியில் 513 லிட்டர் அளவுக்கு இடம் இருக்கிறது. இரண்டாம் வரிசை இருக்கைகளை 60:40 என்ற விகிதத்தில் மடித்தால், டிக்கியின் இடம் மேலும் அதிகமாகிறது. டாப் என்ட் GLS வேரியன்ட்டில், பையில் சாவியோடு டெயில் கேட்டுக்கு அருகே சென்றாலே போதும்; டெயில் கேட் தானாகவே திறந்துகொள்ளும். 6 காற்றுப் பைகள், ABS, EBD, ஹில் அசிஸ்ட், டவுன் ஹில் பிரேக் கன்ட்ரோல் என பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

இன்ஜின்

2.0 லிட்டர் டீசல் இன்ஜின் [e-VGT (Electronic Variable Geometry Turbo Charger)] மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் Dual VTVT இன்ஜின் என்று வாடிக்கையாளர்கள் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளலாம். பெட்ரோல் - டீசல் இரண்டிலுமே 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுத்திருக் கிறார்கள். எலான்ட்ராவில் இருக்கும் அதே 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் இதிலும். டூஸான் கூடுதல் எடை கொண்ட வாகனம் என்பதால், 6,200 ஆர்பிஎம்-ல் 155bhp பவரையும், 19.2kgm டார்க்கையும் அளிக்கிறது. இதன் பெர்ஃபாமென்ஸ் சிட்டிக்குள் ஓட்டுவதற்குப் போதுமானதாக இருக்கிறது. ஸ்போர்ட்ஸ் மோடில் வைத்து ஓட்டினாலும்கூட நெடுஞ்சாலையில் பவர் போத வில்லை. ஆனால், புத்தம் புதிய டீசல் இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் அட்டகாசம். 4,000

ஆர்பிஎம்-ல் இது 185bhp சக்தியையும் 40kgm டார்க்கையும் அளிக்கிறது. குறைந்த, மீடியம், வேகம் என்று எப்படி ஓட்டினாலும் பெர்ஃபாமென்ஸ் சூப்பர். பெர்ஃபாமென்ஸில் பின்னுகிற அதே சமயம், டீசல் இன்ஜின் சத்தம் இல்லாமல் வேலை செய்கிறது. சஸ்பென்ஷனும் குறை சொல்லும்படி இல்லை. 

இதன் விலை குறைந்த பெட்ரோல் வேரியன்ட் `23.17 லட்சம் ரூபாய். GL வேரியன்ட் `26.57 லட்சம் என்று ஹூண்டாய் விலை நிர்ணயம் செய்திருக்கிறது. அதேபோல, விலை குறைந்த டீசல் வேரியன்ட் `26.32 லட்சம்; GL வேரியன்ட் `28.62 லட்சம்; GLS வேரியன்டின் விலை `30.46 லட்சம். பிரீமியம் எஸ்யூவி மார்க்கெட்டில் இப்போது டூஸானுக்கு இருக்கும் ஒரே போட்டி, ஹோண்டா CR-V. இதன் விலை டூஸனைவிட அதிகம். இதில் பெட்ரோல் வேரியன்ட் மட்டுமே இருக்கிறது.

டூஸான் டீசல் மாடலின் டாப் வேரியன்ட்டுக்குக் கொடுக்கும் விலைக்கு மேல் கொஞ்சம் பணம் கொடுத்தால் போதும் டொயோட்டா ஃபார்ச்சூனர் அல்லது ஃபோர்டு எண்டேவர்கூட (ஆரம்ப வேரியன்ட்) வாங்க முடியும். ஆனால், அவை டூஸனைப்போல மோனோகாக் சேஸியில் வடிவமைக்கப்பட்டது அல்ல. ஏழு  இருக்கைகள், ஃபோர் வீல் டிரைவ் என அவை வேறு ரகம். லேடர் ஆன் ஃப்ரேமில் வடிவமைக் கப்பட்டவை. ஆனால், டூஸான் ‘சாஃப்ட் ரோடர்’ ரகம். 2WD டைப். 

நவீனமான எஸ்யூவி வேண்டும் என்பவர் களுக்கான சாய்ஸாக டூஸான் இருக்கும்.
Share on Google Plus

About Thanniya

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment